ETV Bharat / state

நிவாரணப் பொருட்கள் வழங்கிய திமுக நிர்வாகிகள் மீது வழக்கு! - நிவாரண பொருட்கள்

சேலம்: பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய திமுக நிர்வாகிகள் 5 பேர் மீது கெங்கவல்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய திமுக நிர்வாகிகள்

author img

By

Published : Apr 20, 2020, 12:49 AM IST

சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியில் 144 தடை உத்தரவு காரணமாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் வறுமையில் வாடும் பொதுமக்களுக்கு, சமூகநல அலுவலர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்றோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சில நாட்களுக்கு முன்பு, நலத்திட்ட உதவிகள் வழங்க பல்வேறு வழிமுறைகள் வகுக்கப்பட்டு, அது தொடர்பாக புதியதாக அறிவிப்பும் வெளியிட்டு இருந்தது. இது தொடர்பாக திமுகவினர் வழக்குத் தொடர்ந்தனர். அதனை வழக்கு விசாரணை செய்த நீதிமன்றம் பல்வேறு நெறிமுறைகளை அண்மையில் வெளியிட்டிருந்தது .

அதாவது, தனி நபர் இடைவெளியை நிச்சயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மூன்று நபர்கள்தான் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை வகுத்து நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில் கெங்கவல்லி பகுதியில் உள்ள நடுவலூர், கிருஷ்ணாபுரம், கூடமலை, கடம்பூர், ஒதியத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

அப்போது நீதிமன்றங்கள் வழங்கிய நிபந்தனைகளை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.

அதன் காரணமாக அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, கெங்கவல்லி ஒன்றியச் செயலாளர் அகிலன், உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது, கெங்கவல்லி காவல் நிலையம், நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றாத காரணமாக வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிய இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.