ETV Bharat / state

மின்மாற்றியில் சிக்கி உயிருக்குப் போராடிய ஊழியர்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்! - உயிருக்கு போராடிய ஊழியரை காப்பாற்றிய ஓட்டுநர்

சேலத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்த ஊழியரை மின்சாரம் தாக்கியதில் உயிருக்குப் போராடினார். இதனைக் கண்ட தனியார் பேருந்து ஓட்டுநர் உடனடியாக அவரைக் காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Etv Bharat உயிருக்குப் போராடிய மின் ஊழியரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்

author img

By

Published : Aug 2, 2023, 5:47 PM IST

உயிருக்குப் போராடிய மின் ஊழியரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்

சேலம் மாவட்டம், ஓமலூர் சாலை சீதாராமன் செட்டி பிரிவு அருகே மின் மாற்றி ஒன்று அமைந்துள்ளது. இதில், ஏற்பட்ட பழுதை சரி பார்க்கும் பணியில் மின் ஊழியர் சரவணன் நேற்று மாலை ஈடுபட்டார்.

முன்னதாக அவர் , மின்மாற்றிக்கு வரும் மின்சாரத்தை துண்டித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மின்மாற்றியின் மேலே ஏறி பழுதை சரவணன் சரி செய்ய முயன்றார். அப்போது மின் இணைப்பு சரியாக துண்டிக்கப்படாததால் அவரை மின்சாரம் தாக்கியது.

இதனை அதே பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் பார்த்துவிட்டு செய்வதறியாது திகைத்து அவரை காப்பாற்றக்கோரி சத்தம் எழுப்பி உள்ளனர். பழுதை சரி செய்யும் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் சரவணன் மின்சாரம் தாக்கி மேலே இருந்த தாங்கு கம்பியிலிருந்து, அதற்கு கீழே உள்ள கம்பியின் மீது நிலை தடுமாறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனிடைய ஆத்தூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று சேலம் - ஓமலூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. விபத்து நடந்த மின்மாற்றியின் கீழே பொதுமக்கள் கூட்டமாக நின்று கொண்டு அழுது சத்தம் போட்டுக் கொண்டு இருந்ததை கவனித்த அந்த பேருந்தின் ஓட்டுநர் கண்ணன் என்பவர் பேருந்தை விட்டு கீழே இறங்கி நிலைமையை கவனித்தார்.

உடனடியாக மின்மாற்றியின் மேலே ஊழியர் ஒருவர் உயிருக்குப் போராடியதை கண்ட அவர் சற்றும் தாமதிக்காமல், அவர் தான் ஓட்டி வந்த பேருந்தில் இருந்த இரும்பு ராடை எடுத்துக்கொண்டு அங்கு ஓடி வந்து மின்மாற்றியின் மின் இணைப்பை துண்டிக்க முயன்றார்.

இரும்பு ராடு சரியாக உள்நுழையாமல் போகவே முயற்சி வீணானது. உடனே அவர் மின் ஊழியரின் மோட்டார் சைக்கிளில் இருந்த கம்பியை எடுத்து மின் இணைப்பை உடனடியாக நிறுத்தினார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்வினால் மின்வாரிய ஊழியர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கயிறு கட்டி சரவணனைக் கீழே இறக்கி, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து அவர் அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார். தனியார் பேருந்து ஓட்டுநரின் இந்தச் செயலை, அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த உயிரைக் காப்பாற்றிய செயல் குறித்து பேருந்து ஓட்டுநர் கண்ணன் கூறுகையில், 'வழக்கம் போல் ஆத்தூரிலிருந்து சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்தை இயக்கி வந்தேன்.

அப்போது சேலம் - ஓமலூர் சாலையில் மேம்பாலம் அருகே பொதுமக்கள் கூட்டமாக நின்று சத்தமிட்டு கொண்டிருந்ததை பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடி மூலம் அறிந்தேன். உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு அப்படியே ஜன்னல் வழியாக கீழே குதித்து நிலைமையை உணர்ந்து நொடி நேரம் கூட தாமதிக்காமல் மின் இணைப்பை துண்டித்தேன். இதில் ஒரு மனித உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. எனக்கு இந்த செயல் மிகுந்த மன நிறைவை தந்தது' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: 'அண்ணாமலையின் நடைபயணம் நகைப்பிற்குரியது' - கே. பாலகிருஷ்ணன் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.