ETV Bharat / state

பாலத்திலிருந்து ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 16 பேர் படுகாயம்! - போலீஸ் வலைவீச்சு

சேலம்: கொண்டலாம்பட்டி அருகே பட்டர்பிளை பாலத்திலிருந்து ஆம்னி பேருந்து ஒன்று இன்று அதிகாலை கவிழ்ந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

salem
author img

By

Published : Feb 13, 2019, 12:16 PM IST

பெங்களூரிலிருந்து பொள்ளாச்சிக்கு எஸ்.ஆர்.எஸ். என்ற ஆம்னி பேருந்து நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் (பிப்.12) புறப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை (பிப்.13) சேலம் கொண்டலாம்பட்டி பை-பாஸ் அருகில் உள்ள பட்டர்பிளை பாலம் பகுதியில் பேருந்து அதிக வேகத்தில் வந்ததாக தெரிகிறது.

இதனால் கண்ணிமைக்கும் நொடியில் 30 அடி உயர பாலத்திலிருந்து பேருந்தானது தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனசேகர் (35) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், 16-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர், துணை ஆணையர்கள் தங்கதுரை, சியாமளா தேவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விபத்தால் பட்டர்பிளை பாலம் பகுதியில் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. மேலும், 5-க்கும் மேற்பட்ட ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பேருந்தை தூக்கி நிறுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் சரவணன், அசில் ராஜ், துரைசாமி சிவசங்கர், வாசுதேவன் பைசல், சாந்தி, கணேசன், ஜெயலட்சுமி அபிஷேக், முகமது உள்பட 16 பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள்.

விபத்தை அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து மீட்புப் பணியை முடுக்கிவிட்டார். மேலும், அவர் விபத்து குறித்து மாநகர காவல் துறையினரிடம் விசாரணை செய்தார்.

undefined

அன்னதானப்பட்டி காவல் துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் பேருந்தின் மேல்பகுதி முழுவதும் துணி மூட்டைகள், மளிகை பொருட்கள் அடங்கிய மூட்டைகள் அதிகஅளவில் அடுக்கி எடுத்து வந்ததால், பாரம் தாங்காமல் பேருந்து கவிழ முக்கியக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்தது.

சேலம் - தேவராஜன் ( 13.02.2019):

சேலத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்து: ஒருவர் பலி  16 பேர் படுகாயம்

பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சிக்கு செவ்வாய்  நள்ளிரவில் 
எஸ் .ஆர். எஸ் என்ற தனியார் பேருந்து புறப்பட்டு வந்தது .

இந்தப் பேருந்து சேலம் கொண்டலாம்பட்டி 
பை –பாஸ் அருகில் உள்ள பட்டர்பிளை பாலம் பகுதியில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் வந்து கொண்டிருந்தது.

 பேருந்து அதிக வேகத்தில் வந்ததால் கண்ணிமைக்கும் நேரத்தில் 30 அடி உயர பாலத்தில் இருந்து பேருந்து அப்படியே குப்புற கவிழ்ந்து விட்டது.

 இந்த விபத்தில் பொள்ளாச்சி சேர்ந்த தனசேகர் வயது 35 என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் இறந்து விட்டார்.

 பேருந்தில் பயணம் செய்த 16 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

 இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

 இந்த விபத்தால் பட்டர்பிளை பாலம் பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது .

இந்த விபத்து குறித்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கர் , துணை ஆணையாளர்கள் தங்கதுரை , சியாமளா தேவி சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். 5க்கும் மேற்பட்ட ராட்சத கிரேன்கள் விபத்து நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு  பேருந்தை தூக்கி  நிறுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 விபத்தில் பேருந்து ஓட்டுநர் சரவணன் மற்றும் 
அசில் ராஜ் ,துரைசாமி சிவசங்கர் ,வாசுதேவன் பைசல் மற்றும் சாந்தி, கணேசன் ,ஜெயலட்சுமி அபிஷேக் ,முகமது உள்ளிட்ட 16 பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள் .

இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .

விபத்தை அறிந்த சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி உடனே சம்பவ இடம் வந்து மீட்புப் பணியை முடுக்கி விட்டார் .

மேலும் அவர் விபத்து குறித்து சேலம் மாநகர காவல் துறையினரிடம் விசாரணை செய்தார்.
 இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .

பேருந்து கவிழ்ந்ததற்கு  முக்கிய காரணம் பேருந்தின் மேல்பகுதியில் முழுவதும் துணி மூட்டைகள்,  மளிகை பொருட்கள் அடங்கிய மூட்டைகள் மலைபோல் அடுக்கி எடுத்து வந்ததால் பாரம் தாங்காமல் பேருந்து கவிழ்ந்து இருக்கலாம் என தெரியவந்து இருக்கிறது . மேலும் 
இது குறித்து தொடர் விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

( வீடியோ எப்டிபியில் உள்ளது)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.