ETV Bharat / state

தலை, கைகள் வெட்டப்பட்டு புதருக்குள் கிடந்த இளைஞரின் உடல் - சேலத்தில் கொடூரக் கொலை - Male body with head and arms cut salem

சேலம்: தலை, கைகள் வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் உடல் புதர்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder
author img

By

Published : Feb 25, 2020, 11:17 AM IST

சேலம் செட்டிசாவடி அருகே உள்ள பசுவகல் என்ற இடத்தில் சாலையின் ஓரத்தில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று, மனிதக் கையை அழுகிய நிலையில் கவ்விச் சென்றுகொண்டிருந்தது. இதனைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, அந்த நாயைத் துரத்தியுள்ளனர்.

உடனே அந்த நாய், கையை கீழே போட்டுவிட்டு, அருகிலுள்ள புதருக்குள் சென்று மற்றொரு கைய எடுத்துவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.

தலை, கைகள் வெட்டப்பட்ட உடல்

புகாரின்பேரில் விரைந்து வந்த போலீசார், முட்புதரிலிருந்து தலை, கைகள் வெட்டப்பட்ட அழுகிய நிலையில் காணப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தினைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதன் பின்னர் உடல்கூறு ஆய்விற்காக உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தலை, கைகள் வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் உடல்

கொலையானவர் யார் என்பது குறித்தும், அழகிய உடலை இங்கு வீசிவிட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்தும், கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இளைஞர் ஒருவரை கொடூரமான முறையில் கொலைசெய்து உடலை அப்பகுதியல் வீசிச்சென்ற சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருச்சி மூதாட்டி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள், மற்றொருவருக்கு 3 ஆண்டு சிறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.