உடல் நலம் பாதிக்கப்பட்டு சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்றுவரும் பாஜக மூத்த தலைவர் கே.எல். லட்சுமணனை, அக்கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டு மக்களின் நலன் காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன்காரணமாக உலக நாடுகள் வியக்கும் வண்ணம் இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இழிவான அரசியல் செய்து வருகிறார். டெல்லியில் அமர்ந்துகொண்டு தென் மாவட்டங்களுக்கு தீ வைப்பேன் என்று பேசியிருக்கிறார்.இதனை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று, அவரை கைது செய்ய தமிழக பாஜக நிர்ப்பந்திக்கும்.
தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அக்கட்சியை சேர்ந்த அனைத்து தலைவர்களும் பட்டியலின மக்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களையும் இழிவாகப் பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கெல்லாம் திமுகவினர் பதில் சொல்லியே ஆகவேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் - சத்தீஸ்கர் அரசு