வாழைப்பழங்கள் நல்ல விளைச்சல் இருந்தும் ஊரடங்கால் விலை போகவில்லை, இதனால் உள்ளூர் வியாபாரிகள் திணறி வருகின்றனர். ஆயுதபூஜை நெருங்கி வருவதால், வாழைப்பழங்களின் வரத்து சேலம் மார்க்கெட்டுக்கு அதிகரித்துள்ளது. ஒரு தார் வாழைப்பழம் 100 முதல் 250 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதால் வணிகர்கள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர்.
"பண்டிகை காலத்தில் கூட வாழைப்பழ வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடக்கவில்லை. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு விலை கடுமையாக சரிந்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் வாழைப்பழம் வாங்க தயங்குகின்றனர். முசிறி, தொட்டியம் உள்ளிட்ட வெளிமாவட்ட பகுதிகளில் இருந்து சேலம் மார்க்கெட்டிற்கு வாழைப்பழங்கள் டன் கணக்கில் கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்ட பழங்கள் தேங்கி கிடப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பண்டிகை காலம் நெருங்கிவிட்டாலும் பொருளாதார மந்தம் மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கரோனா காலத்தில் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கவே போராட வேண்டிய சூழல் உள்ளதே தவிர, பண்டிகை கொண்டாடும் நிலையில் இல்லை என்பதே நிதர்சனம்.
பசியை போக்க பிச்சை கேட்கும் மக்களிடம் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட சொல்வது தான் வேதனையாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தீபாவளி ஷாப்பிங் செல்ல 50 சிறப்பு பேருந்துகள்!