சேலம் அயோத்தியாபட்டணம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(57), தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் இவர், இன்று தனது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பணிக்குச் சென்றுள்ளார். பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகில் சென்றுகொண்டிருக்கும் போது, இவருக்கு முன்னால் சென்ற பேருந்து திடீரென பிரேக் அடித்ததில், இவர், பேருந்தின் பின்புறம் பலமாக மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது, இவருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக இவர் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில், ஹெல்மெட்டோடு தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த அம்மாபேட்டை காவலர்கள், செல்வராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அதிமுக சர்வாதிகார போக்கு... ஸ்டாலின் காட்டம்