கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில், வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இதனையடுத்து, சேலத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் மனிதர்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் தானியங்கி கருவிகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகிய இடங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்களின் உடல்நிலையை கணக்கிட்டு காய்ச்சல், சளி அறிகுறிகள் இருந்தால், எளிதில் கண்டறிய முடியும் வகையில் இந்த கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தனியார் கல்லூரி குழுமத்தின் தலைவர் தியாகு வள்ளியப்பா 5,000 தானியங்கி வெப்பமானி கருவிகளை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினார். இந்தக் கருவிகள் சேலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொருத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...கரோனா பாதிப்பு: தெலங்கானாவில் இருவர் உயிரிழப்பு