ETV Bharat / state

வங்கி கடனுக்காக விளைநிலத்தை ஜப்தி செய்ய முயற்சி; சேலத்தில் விவசாயிகள் எதிர்ப்பு

சேலத்தில் தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்காக விவசாய நிலத்தை கையகப்படுத்த சென்ற வங்கி ஊழியர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள் விளைநிலத்தில் இறங்கி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 3, 2023, 7:31 PM IST

வங்கி கடனுக்காக விளைநிலத்தை ஜப்தி செய்ய முயற்சி; சேலத்தில் விவசாயிகள் எதிர்ப்பு

சேலம்: சேலத்தில் தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்கு நிலத்தை கையகப்படுத்த வந்த வங்கி ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விளைநிலத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. கொண்டலாம்பட்டி அருகே உள்ள மேட்டுவெள்ளாளர் தெரு பகுதியில் மோகன் என்பவரின் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தை ஜெயராமன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இதனிடைய மோகன் என்பவர் வங்கியில் விவசாய நிலத்தின் மீது தொழில் கடன் பெற்றுள்ளார்.

கடனுக்கான வட்டியை மாதம்தோறும் செலுத்தி வரும் நிலையில், திடீரென இந்த இடத்தை மாற்று நபருக்கு, வங்கி மூலம் எழுதிக் கொடுத்துவிட்டதாகவும்; நிலத்தை காலி செய்யும்படியும் கடந்த இரண்டு மாதங்களாக வங்கி நிர்வாகம் ஜெயராம் என்பவரை அடி ஆட்களை கொண்டுவந்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

வங்கி கடனுக்காக விளைநிலத்தை ஜப்தி செய்ய ஆட்களுடன் வந்திருந்ததாகக் கூறப்படும் வங்கி ஊழியர்கள்

இந்த கடன் தொடர்பாக, ஐந்து வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமல் நிலத்தை அபகரிக்க, வங்கி நிர்வாகம் கடந்த இரண்டு மாதங்களாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று (பிப்.3) விவசாய நிலத்தில் அனைவரும் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது, காவல் துறையுடன் வங்கி நிர்வாகத்தினர் வந்து நிலத்தை காலி செய்யுமாறு கூறினர். மேலும், வங்கிகளுக்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் விவசாய நிலத்தை ஜப்தி செய்வதற்காக வந்தனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்த நபர் குடும்பத்துடன் விவசாய நிலத்தில் நின்றுகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நிலத்தை காலி செய்யமாட்டோம், விவசாயத்தை அழிக்க முயற்சிப்பதாகக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், வங்கி சார்பில் இருந்து இடத்தைச்சுற்றி, வேலி அமைப்பதற்காக 50-க்கும் மேற்பட்டோர் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாய குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்கவே அப்பகுதி மக்கள் ஒன்று கூடினர். இதனால், நிலத்தை ஜப்தி செய்யாமல் அதிகாரிகள் திரும்பிச்சென்றனர். காவல் துறையினர் ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு காணப்பட்டது. மேலும், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விவசாய நிலத்தினை குத்தகைக்கு விட்ட நிலையில், குத்தகைக் காலம் முடிவடைவதற்குள்ளாகவே நிலத்தின் மீது வங்கியில் கடன் பெற்றதும், அதற்காக நிலத்தை வங்கி அதிகாரிகள் போலீசாருடன் வந்து கையகப்படுத்த முயன்ற சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பஞ்சாப் தொழிலதிபர் - சென்னை ஏர்போர்டில் லாக் செய்த போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.