ETV Bharat / state

ஏடிஎம் மையங்களில் தொடர் திருட்டு - இளைஞர் கைது

சேலம்: ஏடிஎம் மையங்களில் மின்கலம் (பேட்டரி) திருடி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏடிஎம் திருட்டு
author img

By

Published : Jul 28, 2019, 2:17 PM IST

சேலத்தில பல்வேறு இடங்களில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களிலிருந்த மின்கலன்கள் திருடுபோனது. இதையறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடப்பட்டுவந்தனர்.

இந்நிலையில் ஏடிஎம் திருட்டு தொடர்பாக பொன்னார் என்ற இளைஞரை கைது செய்தனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உணவகம் ஒன்றில் மாஸ்டராக வேலை பார்த்தவந்த இவரை உணவக நிர்வாகம் திடீரென்று பணியைவிட்டு நீக்கியது.

இதனால் பணத்திற்கு மிகவும் சிரமப்பட்டுவந்த பொன்னார் ஏடிஎம் மையங்களில் உள்ள மின்கலன்களை திருடி அதை பழைய இரும்புக் கடைகளில் குறைந்த விலைக்கு விற்றுவந்துள்ளார்.

இவ்வாறு பல்வேறு பழைய இரும்புக் கடையில் விற்கப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 மின்கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட பொன்னார் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Intro:ஏடிஎம் மையங்களில் பேட்டரி திருட்டு
திருச்சி வாலிபர் கைது ௹2 லட்சம் மதிப்புள்ள பேட்டரிகள் பறிமுதல் .Body:
சேலம்

ஏடிஎம் மையங்களில் பேட்டரி திருட்டு
திருச்சி வாலிபர் கைது

௹2 லட்சம் மதிப்புள்ள பேட்டரிகள் பறிமுதல் .

சேலம் மாநகராட்சி பகுதிகளில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களில் பேட்டரிகளை திருடிவந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் சூரமங்கலம் ,வீராணம் பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களில் இருந்த பேட்டரிகள் திருட்டு போனது.

இதை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் தனிப்படை அமைத்தார்.
இதில் உள்ள சூரமங்கலம் உதவி கமிஷனர் செல்வராஜ், பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர்
கந்தவேல், காவல் உதவி ஆய்வாளர் அயூப்கான் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் விசாரித்து திருச்சி மாவட்டம்
காட்டுபட்டியைச் சேர்ந்த வாலிபர் பொன்னார் என்ற வாலிபரை கைது செய்தனர்.

இவர் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த ஓட்டலில் இருந்து பொன்னாரை நிறுத்தி விட்டனர். இதனால் பணத்திற்கு கஷ்டப்பட்டுவந்த பொன்னார் ஏடிஎம் மையங்களில் உள்ள பேட்டரிகளை திருடி அதை பழைய இரும்புக் கடைகளில் குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளார்.

இவர் பல்வேறு பழைய இரும்பு கடையில் விற்ற 23 பேட்டரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மதிப்பு ௹2 லட்சம் இருக்கும். கைது செய்யப்பட்ட பொன்னார் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.