ETV Bharat / state

அரசு கலைக் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டும் மாணவ மாணவிகள்! - goverment arts college

சேலம்: அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மாணவ மாணவிகள் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுச் சென்றனர்.

அரசு கலைக் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டும் மாணவ மாணவிகள்!
author img

By

Published : Apr 26, 2019, 9:09 PM IST

சேலம் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பிரிவில் உள்ள முதலாமாண்டிற்கான 5,600 காலியிடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சேலம் அரசு கலைக்கல்லூரிக்கு சென்று விண்ணப்ப படிவங்களைப் பெற்று வருகின்றனர். இதுவரை அக்கல்லூரியில் ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

Intro:அரசு கலைக் கல்லூரியில் சேர அதிக அளவில் ஆர்வம் காட்டும் மாணவ மாணவிகள்.

Body:சேலத்தில் மாணவ மாணவிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர்.

குறைந்த நாட்களில் 7 ஆயிரம் விண்ணப்பங்களை கடந்து விநியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சேலம் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பிரிவில் பி.ஏ.தமிழ்,ஆங்கிலம் பொருளாதாரம், வரலாறு, பொது நிர்வாகவியல், அரசியல் அறிவியல், பி.எஸ்சி. கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியமைப்பியல், கணினி அறிவியல், பி.காம்.கூட்டுறவு, வணிகவியல் என பட்ட பிரிவுகள் உள்ளன.

இளங்கலை பிரிவில் 20 பாடப்பிரிவுகளில் சுமார் 4 ஆயிரத்து 530 இடங்கள் உள்ளது. இதேபோல முதுகலை பிரிவில் சுமார் 900 இடங்கள் உள்ளன. புத்தம் இளங்கலை, முதுகலை பிரிவில் 5,600 இடங்கள் முதல் ஆண்டில் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த வாரம் 17ம் தேதி முதல் அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது. பொது பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 50 வசூலிக்கப்படுகிறது. எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு முதல் விண்ணப்பம் இலவசமாகவும், இரண்டாவது விண்ணப்பத்துக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதை அடுத்து சேலம் அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பங்களை பெறுவதற்கு சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் அதிக அளவில் குவிந்தனர்.

மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்த முதலாம் ஆண்டு விண்ணப்ப படிவத்தை வாங்கி கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வருகின்றனர்.

தற்போது இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக சுமார் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Conclusion:இதில் தற்போது வரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.