ETV Bharat / state

எடப்பாடி - புகழேந்தி சந்திப்பு; அமமுக அஸ்தமனம் ஆகிறதா? - TTV Dinakaran

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்த பெங்களூரு புகழேந்தி, நேரில் சந்தித்து பேசியது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி - புகழேந்தி சந்திப்பு
author img

By

Published : Oct 26, 2019, 3:17 AM IST

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் புகழேந்தி. கர்நாடக மாநில செய்தி தொடர்பாளராக அக்கட்சியில் அவர் பொறுப்பு வகித்து வந்தவர் . இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு டிடிவி தினகரனுடன் புகழேந்திக்கு கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

அது தொடர்பாக அவர், கட்சியினர் மத்தியில் பேசிய ஆடியோ, வீடியோ பதிவுகள் சமூகவலைதளங்களில் பரவி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் தினகரனுக்கும் புகழேந்திக்கும் மோதல் பெரியதாக வெடித்து இருவரின் அரசியல் உறவில் விரிசல் விழுந்தது. இதனையடுத்து புகழேந்தி கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்த புகழேந்தி, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி இல்லம் அருகே காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’ 35 ஆண்டுகால நண்பர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சியை எப்படி வழிநடத்தி மாபெரும் வெற்றிகளை கொடுத்தார்களோ அதேபோல எடப்பாடி பழனிசாமி இந்த முறை நடந்த இடைத்தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். கட்சியையும் ஆட்சியையும் பாதுகாத்து வைத்திருக்கிறார். அதைத்தான் சசிகலாவும் விரும்புவார்.

எடப்பாடி - புகழேந்தி சந்திப்பு
என்னிடம் முதலமைச்சர் மிகுந்த அன்பாக பேசினார். வாழ்த்துக்களை தெரிவிக்க வந்தேன். நெஞ்சார வாழ்த்தினேன். கட்சியில் இணைவதற்காக வரவில்லை. சசிகலா ஜெயிலுக்கு போகும் போது இரண்டு பணிகளை கொடுத்துச் சென்றார். ஆட்சி, கட்சியை முதலமைச்சரிடம் ஒப்படைத்தார்கள். இரண்டுக்கும் எந்தவொரு குந்தகமும் இல்லாமல் வீறு நடைபோடுகிறது. சரித்திரம் படைக்கிறது. இதை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. டிடிவி தினகரனை நம்பி கொடி பிடித்து சென்றோம். அத்தனை கொடுமைகளையும் அனுபவித்தோம். இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறோம். இருந்தாலும் எங்களுக்கு என்று தன்மானமும், கொள்கையும் இருக்கிறது.

இப்போதும் நான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான். டிடிவி தினகரன் கதை முழுவதுமாக முடிந்து விட்டது. அவர் இனி தமிழ்நாட்டு அரசியலில் ஒன்றும் செய்ய முடியாது. அவர் சந்திக்கின்ற கடைசித் தேர்தல் உள்ளாட்சித் தேர்தலாகத்தான் இருக்கும் . வரும் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னால் அவர் இருக்க மாட்டார், கட்சியும் இருக்காது'' என்று மனதில் இருந்ததை எல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார் புகழேந்தி.

சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து அதிமுகவில் ஐக்கியமான இசக்கி சுப்பையா, சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர் .

இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைந்த போது டிடிவி தினகரன் அளித்த பேட்டி ஒன்றில் , " இசக்கி சுப்பையா தன்னுடைய சுய நலனுக்காக அதிமுகவில் இணைந்து இருக்கிறார் . புகழேந்தி என்னுடைய 28 ஆண்டு கால நண்பர் . அவர் இணைந்திருந்தால் நான் ஏனென்று கேட்டிருப்பேன். வருத்தம் இருக்கும் " என்று தெரிவித்திருந்தார்.

தினகரனின் நெருங்கிய நண்பராக வலம் வந்த புகழேந்தி, இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து , பேசி இருப்பது அதிமுக மற்றும் அமமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தினகரன் மீது அதிருப்தியில் இருக்கும் அவரது கட்சியினரை தமிழ்நாடு முழுக்க ஒன்றிணைத்து மீண்டும் அதிமுகவில் இணைக்க முதலமைச்சர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என்பதை இந்த சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சேலம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர்களிடம் விசாரித்தபோது,' அரசியலில் எதுவும் நடக்கும். புகழேந்தி கூறியிருப்பது அவரின் தனிப்பட்ட கருத்து' என்று தெரிவித்தனர்.

ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையின் மீதான அதிருப்தியில் இருந்த அதிமுகவின் முக்கிய பிரதிநிதிகள் மாவட்டம்தோறும் ஒன்றிணைந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக அடித்தளம் இட்டு தமிழக அரசியலில் புதிய கட்சி உதயம் ஆவதற்கு அடிப்படையாக இருந்தனர். அந்தநிலை தற்போது மாறி மீண்டும் எடப்பாடி பழனிசாமி மீதும், பன்னீர்செல்வம் மீதும், அதிருப்தி அடைந்த நபர்கள் ஒவ்வொருவராக அதிமுகவில் இணைந்து வருவதும் இணைய விருப்பம் தெரிவித்து இருப்பதும், தினகரன் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திமுக பிரமுகர் விடுத்த வெடிகுண்டு மிரட்டல்; கதிகலங்கிய காவல்துறையினர்..!

Intro:

அமமுக அஸ்தமனம் ஆகிறதா!
அரசியல் வட்டாரத்தில் பரபரப்புBody:

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்த பெங்களூரு புகழேந்தி , நேரில் சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் புகழேந்தி.

கர்நாடக மாநில செய்தி தொடர்பாளராக அக்கட்சியில் அவர் பொறுப்பு வகித்து வந்தவர் . இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு டிடிவி தினகரனுடன் புகழேந்திக்கு கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

அது தொடர்பாக அவர், கட்சியினர் மத்தியில் பேசியதாக ஆடியோ வீடியோ பதிவு சமூகவலைதளங்களில் பரவி , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது .

அது தொடர்பாக தினகரனுக்கும் புகழேந்திக்கும் மோதல் பெரியதாக வெடித்து இருவரின் அரசியல் உறவில் விரிசல் விழுந்தது.

இதனையடுத்து புகழேந்தி கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனையும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நேரில் சந்தித்த புகழேந்தி, விக்கிரவாண்டி , நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களில் அஇதிமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இந்த சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி இல்லம் அருகே காத்திருந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .

35 ஆண்டுகால நண்பர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எம்ஜிஆர் , ஜெயலலிதா கட்சியை எப்படி வழிநடத்தி மாபெரும் வெற்றிகளை கொடுத்தார்களோ அதேபோல எடப்பாடிபழனிசாமி இந்த முறை நடந்த இடைத்தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். இமாலய வெற்றியை பெற்று இருக்கிறார் எடப்பாடி.

கட்சியையும் ஆட்சியையும் பாதுகாத்து வைத்திருக்கிறார். அதைத்தான் சசிகலாவும் விரும்புவார். டிடிவி தினகரன் வைத்து இருப்பது ஒரு கட்சி. அதில் இணைவாரா அவர்.

அவர் என்னிடம் என்ன மாமியார் வீட்டுக்கு வந்தீங்களா என்று கேட்டு அன்பாக பேசினார். முதலமைச்சர், அமைச்சராக இருந்த காலத்தில் தன் வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் பொருள் வாங்க வேண்டும் என்றாலும் பெங்களூரு வருவார் . இருவரும் சந்தித்துப் பேசுவோம்.

இன்று வாழ்த்துக்களை தெரிவிக்க வந்தோம். நெஞ்சார வாழ்த்தினோம். கட்சியில் இணைவதற்காக வரவில்லை. அதை பிறகு ஊடகங்களுக்கு தெரிவிக்கிறேன்.

சசிகலா ஜெயிலுக்கு போகும் போது இரண்டு பணிகளை கொடுத்துச் சென்றார். ஆட்சி, கட்சியை இவரிடம் ஒப்படைத்தார்கள்.

இரண்டும் எந்த ஒரு குந்தகமும் இல்லாமல் வீறு நடைபோடுகிறது. சரித்திரம் படைக்கிறது. இதை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

டிடிவி தினகரனை நம்பி கொடி பிடித்து சென்றோம். அத்தனை கொடுமைகளையும் அனுபவித்தோம்.

இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறோம். இருந்தாலும் எங்களுக்கு என்று தன்மானம் கொள்கை இருக்கிறது .இப்போதும் நான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான்.

டிடிவி தினகரன் கதை முழுவதுமாக முடிந்து விட்டது. அவர் ஒன்றும் செய்ய முடியாது. அவர் சந்திக்கின்ற கடைசித் தேர்தல் உள்ளாட்சித் தேர்தலாகத்தான் இருக்கும் .

வரும் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னால் அவர் இருக்க மாட்டார். அவரது கட்சியும் இருக்காது.

அமமுக கட்சிக்காக எவ்வளவு உழைத்து இருப்போம். விசுவாசமே தெரியாத மனிதர் என்றால் அது தினகரன் தான்.

இன்னும் போகப்போக வேடிக்கையைப் பாருங்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எங்க கட்சி." என்று மனதில் இருந்ததை எல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார் புகழேந்தி.

அவருடன் சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து அதிமுகவில் ஐக்கியமான இசக்கி சுப்பையா, சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர் .

இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைந்த போது டிடிவி தினகரன் அளித்த பேட்டி ஒன்றில் ," இசக்கி சுப்பையா தன்னுடைய சுய நலனுக்காக அதிமுகவில் இணைந்து இருக்கிறார் .

புகழேந்தி என்னுடைய 28 ஆண்டு கால நண்பர் . அவர் இணைந்திருந்தால் நான் ஏனென்று கேட்டிருப்பேன்.

வருத்தம் இருக்கும். " என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் , அரசியல் காட்சிகள் சில மாதங்களில் மாறி , தினகரனின் நெருங்கிய நண்பராக வலம் வந்த புகழேந்தி, இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து , பேசி இருப்பது அதிமுக மற்றும் அ ம மு க வில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுகவின் அதிருப்தியாளர்கள் தினகரன் பக்கம் ஒன்று சேர்ந்ததை கணக்கு எடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது தினகரன் மீது அதிருப்தியில் இருக்கும் அவரது கட்சியினரை தமிழகம் முழுக்க ஒன்றிணைத்து மீண்டும் அதிமுகவில் இணைக்க திட்டமிட்டுள்ளார் என்பதை இந்த சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளது .

இதுதொடர்பாக சேலம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர்களிடம் விசாரித்தபோது,' அரசியலில் எதுவும் நடக்கும். புகழேந்தி கூறியிருப்பது அவரின் தனிப்பட்ட கருத்து' என்று தெரிவித்தனர்.

ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையின் மீதான அதிருப்தியில் இருந்த அதிமுகவின் முக்கிய பிரதிநிதிகள் மாவட்டம்தோறும் ஒன்றிணைந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக அடித்தளம் இட்டு தமிழக அரசியலில் புதிய கட்சி உதயம் ஆவதற்கு அடிப்படையாக இருந்தனர் .

‌Conclusion:
இது தற்போது மாறி மீண்டும் எடப்பாடி பழனிசாமி மீதும், பன்னீர்செல்வம் மீதும், அதிருப்தி அடைந்த நபர்கள் ஒவ்வொருவராக அதிமுகவில் இணைந்து வருவதும் இணைய விருப்பம் தெரிவித்து இருப்பதும், தினகரன் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.