ETV Bharat / state

கேரள தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது - சேலம் கொலை மிரட்டல்

கேரள மாநில தலைமைச் செயலக அலுவலர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் உள்பட பலருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கேரளாவை சேர்ந்த நபரை சேலத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.

accused-arrested-the-threatened-case
accused-arrested-the-threatened-case
author img

By

Published : Aug 11, 2021, 10:14 AM IST

சேலம் : கடந்த 15 நாள்களுக்கு முன்பு தனியார் நட்சத்திர உணவகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் உணவகம் முழுவதும் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். ஆனால் தனியார் நட்சத்திர ஹோட்டலில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

விசாரணையில் உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்,இலவச வைஃபை வசதியைப் பயன்படுத்தி, அங்கு ஏற்கனவே தங்கியிருந்த நபர் வெடிகுண்டு மிரட்டலை, உணவக நிர்வாகத்திற்கு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் சேலம் அடுத்த மாமாங்கத்தில் உள்ள இன்னொரு தனியார் நட்சத்திர உணவகத்துக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல்

விசாரணையில் ஒரே நபர் இரண்டு நட்சத்திர உணவகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.இந்நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியருக்கு செல்போன் எண் மூலமாக பேசிய மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதேபோன்று கேரள மாநிலத்தின் தலைமைச் செயலக அலுவலர்கள், அங்கு உள்ள ரயில்வே நிலைய மேலாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து கேரள மாநில காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுக்கப் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண், சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே உள்ள சித்தனூரில் பழைய பேப்பர் கடை வைத்திருக்கும் கிருஷ்ணன் என்பவர் எண் என்று கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து சேலம் காவல் துறையினரை தொடர்பு கொண்ட கேரளா காவல் துறையினர் கிருஷ்ணனிடம் விசாரணை நடத்த கோரினர்.

தீவிர விசாரணையில் காவல் துறை

இதனையடுத்து சேலம் மாநகர காவல் துறையினர், கிருஷ்ணனைப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது கிருஷ்ணன் தனது செல்ஃபோன் திருடுப் போனதாக தெரிவித்துள்ளார்.செல்போனை திருடி சென்ற நபர் பலருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிர விசாரணையில் காவல்துறை
தீவிர விசாரணையில் காவல்துறை
இதையடுத்து சேலம் மாநகர காவல் துறையினர் தனிப்படை அமைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தனர். சைபைர் கிரைம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கிருஷ்ணன் செல்போன் எண் பெங்களூருவில் பயன்பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டது.
பின்னர் சில மணி நேரங்களில் அந்த எண் சேலம் நட்சத்திர ஹோட்டலில் பயன்படுத்தப்பட்டு வருவதை கண்டுபிடித்த சேலம் காவல்துறையினர், உடனடியாக அங்கு சென்று, கிருஷ்ணன் செல்போன் எண்ணை பயன்படுத்தி வந்த, கேரள மாநிலத்தை சேர்ந்த பிரேம்ராஜ் நாயர் என்பவரைக் கைது செய்தனர்.

?

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரேம்ராஜ் நாயர் இந்திய விமான படையில் மருத்துவ உதவியாளராக 1994 முதல் 2004 ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும், பின்னர் முந்திரி வியாபாரம் செய்து பெரும் நஷ்டம் அடைந்து, வாங்கிய கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா ," பலருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிரேம்ராஜ் நாயர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவல் கேரள மாநில காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்ததும், அவர்களிடம் பிரேம் ராஜ் நாயர் ஒப்படைக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.