ETV Bharat / state

கொலை செய்துவிட்டு பொங்கல் கொண்டாடிய தொழிலாளி கைது - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: காதல் தகராறில் பெயிண்டரை கொலை செய்துவிட்டு சேலத்தில் பதுங்கியிருந்த தறி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கொலையாளி
கொலையாளி
author img

By

Published : Jan 16, 2020, 8:59 PM IST

நாமக்கல் மாவட்டம் வெப்படைப் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். (வயது 20) பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள விக்னேஷ் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று வந்தார் இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்தப் பெண் இவரை காதலிக்கவில்லை.

இருப்பினும் விக்னேஷ் அந்தப் பெண் வெளியில் வரும்போதும், வீட்டுக்கு செல்லும்போதும் பின் தொடர்ந்து வந்தார். இதுபற்றி அந்தப் பெண், தான் அந்த இளைஞரை விரும்பவில்லை. இருந்தாலும் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கிறார். எனவே அவரை கண்டிக்குமாறு தறி தொழில் செய்துவரும் அவரது அண்ணனிடம் தெரிவித்தார்.

பிறகு அவரது அண்ணன் விக்னேஷை சந்தித்து தனது தங்கை பின்னால் செல்வதை விட்டுவிடுமாறு எச்சரித்தார். இருந்தாலும், பெண்ணின் பின்னால் சுற்றுவதை விக்னேஷ் நிறுத்தவில்லை .

இந்நிலையில் நேற்று பெயிண்டர் விக்னேஷ் மதுகுடிக்க வெளியில் சென்றார். இதனை அறிந்த இளம் பெண்ணின் அண்ணனும் மதுகுடிக்க வந்தார். இதையடுத்து அவர் பெயிண்டர் விக்னேஷை அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்குச் சென்றார்.

அங்கு இருவரும் மீண்டும் மது குடித்தனர். அப்போது, தனது தங்கையின் பின்னால் சுற்றுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் கொலை செய்துவிடுவேன் என்று விக்னேஷை மிரட்டியுள்ளார். இதனால் அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டு கைக்கலப்பில் முடிந்தது.

இதில் கோபம் அடைந்த இளம் பெண்ணின் அண்ணன், தான் மறைத்து எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து பெயிண்டர் விக்னேஷை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விக்னேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணையைத் தொடங்கினர். இந்த சூழலில் கொலை செய்த விக்னேஷ் சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது அண்ணியின் வீட்டில் இருப்பதாக காவல் துறையினருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, தனது அண்ணி வீட்டில் இன்று அதிகாலை பொங்கல் கொண்டாடிக்கொண்டிருந்த இளம்பெண்ணின் அண்ணனை காவல் துறையினர் கைது செய்தனர்.

Intro:கொலை செய்துவிட்டு சேலத்தில் பதுங்கிய தறி தொழிலாளி கைது .

பொங்கல் கொண்டாட்டத்தில் இருந்தவரை சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.Body:
காதல் தகராறில் பெயிண்டர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார் .
கொலை செய்த தறி தொழிலாளி சேலத்தில் பொங்கல் கொண்டாட்டத்தின் போது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். (வயது 20) பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள விக்னேஷ் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று வந்தார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார் .ஆனால் அந்தப் பெண் இவரை காதலிக்கவில்லை.

இருப்பினும் விக்னேஷ் அந்தப் பெண் வெளியில் வரும்போதும்,
வீட்டுக்கு செல்லும்போதும் பின் தொடர்ந்து வந்தார். இதுபற்றி அந்தப் பெண் அவரது அண்ணனும், தறி தொழிலாளியுமான
விக்னேசிடம் (வயது 25)தெரிவித்தார்.

தான் அந்த வாலிபரை விரும்பவில்லை என்றும் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வருகிறார். இதனால் அவரை கண்டியுங்கள் என்றும் தெரிவித்தார்.
பிறகு தறி தொழிலாளி விக்னேஷ்பெயிண்டர் விக்னேஷ் சந்தித்து தனது தங்கையின் பின்னால் சுற்றுவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் விக்னேஷ் பெண்ணின் பின்னால் சுற்றுவதை நிறுத்தவில்லை .
இந்த நிலையில் நேற்று பெயிண்டர் விக்னேஷ் மதுகுடிக்க வெளியில் சென்றார்.
இதனை அறிந்த இளம் பெண்ணின் அண்ணன் விக்னேசும் மதுகுடிக்க வந்தார் .
பின்னர் அவர் பெயிண்டர் விக்னேசை அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்றார்.

அங்கு இருவரும் மீண்டும் மது குடித்தனர்.
அப்போது தறி தொழிலாளி விக்னேஷ் தனது தங்கையின் பின்னால் சுற்றுவதை நிறுத்திக் கொள்ளுமாறு இல்லையெனில் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார் .இதனால் அவர்களிடையே வாய்தகராறு ஏற்பட்டு கைக்கலப்பில் முடிந்தது.

இதில் கோபம் அடைந்த தறி தொழிலாளி விக்னேஷ் ,
தான் மறைத்து எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து பெயிண்டர் விக்னேசை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

விக்னேஷின் சடலத்தை பள்ளிபாளையம் போலீசார் மீட்டு விசாரணை செய்து வந்தனர் .
இந்த நிலையில் கொலை செய்த விக்னேஷ் சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது அண்ணியின் வீட்டிற்கு வந்துவிட்டார் .

இன்று அதிகாலை விக்னேஷ் பொங்கல் கொண்டாடி கொண்டிருந்தார்.இதனை அறிந்த கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்கவேல் மற்றும் காவலர்கள் அங்கு சென்று விக்னேசை கைது செய்தனர்.

பின்னர் இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தியிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து பள்ளிபாளையம் போலீசார் சேலம் வந்து விக்னேஷிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.