ETV Bharat / state

ரயில்வே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

author img

By

Published : Aug 28, 2020, 5:48 PM IST

Updated : Aug 28, 2020, 6:41 PM IST

சேலம்: ரயில்வே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த, நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

மேட்டூர் ரயில் நிலையத்திலிருந்து சேலம் சந்திப்பு வரை இரண்டாவது இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருப்பு பாதையின் இருபுறமும் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த பழைய சுற்றுச்சுவருக்கு அருகே புதிய சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் ரயில்வே நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆக.26) மாலை புதிய சுற்றுச்சுவர் அமைப்பதற்காக, ஜே.சி.பி இயந்திரம் மூலம் பழைய சுற்றுச்சுவர் அருகே குழிதோண்டும் பணிகளை தொழிலாளர்கள் செய்து வந்தனர். இப்பணியில் 13 கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சுமார் 40 மீட்டர் நீளமுள்ள சுற்றுச்சுவர் அப்படியே இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.

இதில் நான்கு பெண் தொழிலாளர்கள் உள்பட 6 பேர் இடிபாடுகளிடையே சிக்கி உயிருக்குப் போராடினர். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் அரை மணி நேரத்தில் இடிபாடுகளிடையே சிக்கியவர்களை மீட்டனர்.

அதில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட தங்கபொன்னு(30), லட்சுமி(38), பத்மராஜன்(20), கோகிலா(32), சீனிவாசன்(31), கவிதா(40) ஆகியோர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் கவிதா என்ற பெண் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சுற்றுச்சுவர் இடிந்து தொழிலாளர்கள் மீது விழும் சிசிடிவி காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே உயிரிழந்த கவிதா குடும்பத்தினருக்கு அரசு 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கி உள்ளது.

இதையும் படிங்க: சுவர் இடிந்த விபத்து: இறந்தவரின் குடும்பத்திற்கு செல்வகணபதி நிதியுதவி!

Last Updated : Aug 28, 2020, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.