ETV Bharat / state

யோகா பயிற்சி செய்து உலகச் சாதனை படைத்த 10 வயது சிறுமி! - யோகா பயிற்சி செய்து உலக சாதனை

கரோனா மூன்றாவது அலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி 31 நிமிடம் யோகா பயிற்சி செய்து உலகச் சாதனை படைத்துள்ளார்.

yoga girl record
yoga girl record
author img

By

Published : Jul 17, 2021, 5:17 PM IST

சேலம் : ஆத்தூர் அடுத்த தேவியாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல், சுதா தம்பதியின் 10 வயது மகள் தர்ஷிகா. இந்தச் சிறுமி ஊரடங்கை பயனுள்ள வகையில் பயன்படுத்தி யோகா பயிற்சிகளை முறையாகக் கற்று தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

இதையடுத்து யோகா பயிற்சியில் உலகச் சாதனை படைக்க விரும்பிய சிறுமி தர்ஷிகா, தனது தலையில் தக்காளி பழத்தை வைத்துக்கொண்டு ஆடாமல் அசையாமல்தக்காளி பழம் கீழே விழாமல் 31 நிமிடம் பத்மாசனம் செய்து இன்று (ஜூலை 17) சாதனை படைத்தார்.

சிறுமியின் சாதனையை நேரில் பார்த்துப் பாராட்டிய சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் வேதரத்தினம் பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கி வாழ்த்தினார். சிறுமியின் இந்தச் சாதனையை பதஞ்சலி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் அங்கீகரித்து உலகச் சாதனைக்கான கேடயத்தை வழங்கியது.

உலகச் சாதனை படைத்த 10 வயது சிறுமி
இந்த யோகா சாதனை குறித்து சிறுமி தர்ஷிகா கூறுகையில், “நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்கவும் அனைவரும் யோகா செய்ய வேண்டும். கரோனா மூன்றாவது அலையிலிருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் பெற்றோர் குழந்தைகளுக்கு யோகா கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்" எனக் கூறினார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.