மக்கள் பணியாற்ற வயது தடையில்லை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 92 வயது மூதாட்டி! - Salem old lady filed Nomination
சேலம்: ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட 92 வயது மூதாட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது. இன்று ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால், சேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வேட்பாளர்களின் கூட்டம் அலைமோதியது.
இன்று வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 92 வயது மூதாட்டி கனகவள்ளி வேட்புமனு தாக்கல் செய்தார். முருங்கபட்டி ஊராட்சி மன்ற தலைவராகப் போட்டியிடும் கனகவல்லி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவராகப் பதவி வகித்துள்ளார்.
92 வயதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மூதாட்டி ஒருவர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தது, வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மதுரை அருகே ஆன்லைனில் லாட்டரி விற்பனை - ஐந்து பேர் கைது
Body:தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான சாதாரண தேர்தல் நடைபெற உள்ளது.
இதனை ஒட்டி வேட்புமனு தாக்கல் கடந்த சில நாட்களாக செய்யப்பட்டு வந்தது . இன்று ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் சேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வேட்பாளர்களின் கூட்டம் அலைமோதியது.
இன்று வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தொண்ணூறு வயது மூதாட்டி கனகவள்ளி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முருங்கபட்டி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிடும் கனகவல்லி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் கணவர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் முருங்கபட்டி ஊராட்சியில் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளனர் என்றும் கூறும் கனகவல்லி தன்னால் நாளிதழ்கள் படிக்க முடிகிறது என்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்த்து தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது என்றும் கூறி ஆச்சரியம் ஊட்டுகிறார்.
Conclusion:
90 வயதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மூதாட்டி ஒருவர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தது, வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.