தமிழகம், புதுவையில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு துவங்கியது.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் சேலம் மக்களவைத் தொகுதியில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன.
ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய மூன்று பேரவை தொகுதிகள் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியிலும், மேட்டூர் பேரவை தொகுதி தருமபுரி மக்களவைத் தொகுதியிலும், சங்ககிரி பேரவை தொகுதி நாமக்கல் மக்களவைத் தொகுதியிலும் வருகிறது.
இந்நிலையில் வியாழன் (ஏப்.18) மாலை 6 மணி நிலவரப்படி 77.39 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்கள் 638283, பெண்கள் 608152, இதர் 48 பேர் என மொத்தம் 12,46,483 பேர் வாக்களித்தனர்.
மொத்தம் உள்ள 16,11,982 வாக்காளர்களில் 12,46,483 பேர் (77.39%) வாக்களித்துள்ளனர்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல்துறை, மத்திய துணை ராணுவப் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையான சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.
சேலம் - தேவராஜன்
(Visual file shots use pls)
சேலம் மக்களவைத் தொகுதியில் 77.39% வாக்குப்பதிவு!
சேலம்(18.04.2019): சேலம் மக்களவைத் தொகுதியில் 77.39% சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழகம், புதுவையில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு துவங்கியது.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் சேலம் மக்களவைத் தொகுதியில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன.
ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய மூன்று பேரவை தொகுதிகள் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியிலும், மேட்டூர் பேரவை தொகுதி தருமபுரி மக்களவைத் தொகுதியிலும், சங்ககிரி பேரவை தொகுதி நாமக்கல் மக்களவைத் தொகுதியிலும் வருகிறது.
சேலம் மக்களவைத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 8,09,760 பேரும், பெண் வாக்காளர்கள் 8,02,132 பேரும், இதரர் 90 பேரும் என 16,11,982 பேர் உள்ளனர்.
சுமார் 593 வாக்குச்சாவடி மையங்களில் 1803 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. 172 பதற்றமான வாக்குச்சாவடிகள் அடங்கும். தேர்தல் நுண் பார்வையாளர்கள் 172 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுமார் 779 மையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மண்டல அலுவலர்கள் 164 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்-1, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்-2, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் -3 என்ற நிலைகளில் தலா 2,164 பேர் என மொத்தம் 8,656 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மின்னணு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் 2,228-ம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் 4242, வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் 2390 வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்டது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது முதல் பெண்கள், ஆண்கள், வயதானவர்கள், மாணவர்கள் உள்பட நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர்.
காலை 9 மணி நிலவரப்படி 7.3 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதாவது ஆண்கள் 28813, பெண்கள் 29365, மொத்தம் 58181 பேர் வாக்களித்தனர்.
காலை 11 மணி நிலவரப்படி 18.32 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்கள் 143405, பெண்கள் 151899, இதரர் 6 பேர் என மொத்தம் 295309 பேர் வாக்களித்தனர்.
இதில் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலான 2 மணி நேரத்தில் மட்டும் சுமார் 26.53 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பகல் 1 மணி நிலவரப்படி 44.85 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்கள் 364502, பெண்கள் 358444, இதரர் 6 பேர் என மொத்தம் 722952 பேர் வாக்களித்தனர்.
மாலை 3 மணி நிலவரப்படி 54.66 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்கள் 442947, பெண்கள் 438148, இதரர் 6 பேர் என மொத்தம் 881101 பேர் வாக்களித்தனர்.
மாலை 5 மணி நிலவரப்படி 67.02 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்கள் 551422, பெண்கள் 528878, இதரர் 17 பேர் என மொத்தம் 1080317 பேர் வாக்களித்தனர்.
மாலை 6 மணி நிலவரப்படி 77.39 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆண்கள் 638283, பெண்கள் 608152, இதரர் 48 பேர் என மொத்தம் 12,46,483 பேர் வாக்களித்தனர்.
மொத்தம் உள்ள 16,11,982 வாக்காளர்களில் 12,46,483 பேர் (77.39%) வாக்களித்துள்ளனர்.
பேரவை தொகுதி வாரியாக...
ஓமலூர் தொகுதியில் 81.72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
சுமார் 2,30,917 பேர் வாக்களித்தனர். எடப்பாடியியில் 227347 வாக்காளர்கள் (82.97%), சேலம் மேற்கு 201888 (70.43%), சேலம் வடக்கு 187208 (70.39%), சேலம் தெற்கு 190395 பேர் (74.99%), வீரபாண்டியில் 208728 பேர் (83.86%) வாக்களித்துள்ளனர்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல்துறை, மத்திய துணை ராணுவப் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையான சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக எடுத்து சென்று வைக்கப்பட்டது.