சேலம் மாவட்டத்தில் இன்று (அக். 24) புதிதாக 148 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய பாதிப்புடன் சேர்த்து, சேலம் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 186 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இதில் 23 ஆயிரத்து 946 பேர் சிகிச்சை முடிந்து அவரவர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். மேலும், ஆயிரத்து 836 பேர் கரோனா சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இரண்டு பேர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால், சேலம் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 404 ஆக உயர்ந்துள்ளது.