ராணிப்பேட்டை: கலவை அருகே உள்ள மேல்புதுப்பாக்கம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதில் சேல்ஸ்மேனாக தேவேந்திரன் என்பவர் பணியாற்று வருகிறார். இந்நிலையில் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் மதுக்கடையில் ரூ.130 குவார்ட்டர் வாங்கிய போது ரூ.140-க்கு விற்பனை செய்துள்ளார். அவ்வாறு விற்பனை செய்த சேல்ஸ்மேனுடன் மது பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு 5 ரூபாய் எடுத்தீங்க! இப்போ 10 ரூபாய் எடுத்த எப்படினூ கேட்டும், கடைய மூடச் சொல்லி வாக்குவாதம் முற்றியது. அதற்குப் பின் சேல்ஸ்மேன் நாங்க மட்டுமா விக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் தான் விக்கிறாங்க, அதனால எங்க வேண்டுமானாலும் கம்ப்ளைண்ட் பண்ணுனு சொல்ல அதற்கு வாடிக்கையாளர் பில் கேட்டு கொந்தளித்துள்ளார்.
மேலும் கடையை மூடுனு சொல்லியும் எதற்கும் அஞ்சாம இருந்த சேல்ஸ்மேன், போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் பண்ணிகோ, இல்லன்னா டாஸ்மார்க் ஆபீசுக்கு போய் கம்ப்ளைன்ட் பண்ணு எனக்கு ஒன்னும் பயம் இல்ல என அசால்டாக சேல்ஸ்மேன் பதில் சொல்லியுள்ளார். இவ்வளவு சண்டை போட்டும் குவார்ட்டருக்கு மேல 10 ரூபாய் வாங்கிட்டு தான் குவார்ட்டரே கொடுத்தாங்கனு புலம்புகிறார்கள் மதுப்பிரியர்கள்.