ராணிப்பேட்டை அருகே தனியார் தோல் பதனிடும் மற்றும் காலணிகள் தயாரிக்கும் கே.எச். இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இயங்கிவருகிறது. இந்நிறுவனத்தில் போதுமான வேலை இல்லை எனக் கூறி கடந்த 10 ஆண்டுகளாக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 92 பேரை எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி ஆட்குறைப்பு என்ற பெயரில் பணி நீக்கம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு வந்த ஊழியர்கள், வேலை இல்லை என தொழிற்சாலை நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டுள்ள பலகையை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து ஊழியர்கள் தொழிற்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கைதான கடத்தல் கும்பல்; தப்பிய அம்மன் சிலை