ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கைத்தறி பட்டு நெசவாளர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கைத்தறி பட்டு நெசவு என தெரிவித்து சிலர் மின்னணு நெசவு இயந்திரங்கள் மூலமாக சட்டவிரோதமாக அனுமதியின்றி பட்டு நெசவு துணிகளை நெய்து வியாபாரிகளிடம் குறைந்த விலையில் பட்டாடைகளை விற்பனை செய்து வருவதாகவும் அதனைப் பெற்று செல்லும் வியாபாரிகள் கைத்தறி நெசவு பட்டு துணிகள் என பொதுமக்களிடம் விற்பனை செய்துவருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக பாரம்பரிய கைத்தறி நெசவு பட்டுத் துணிகளின் தரம் குறைவதோடு அதன் உற்பத்தி செய்கின்ற கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருவதாக கைத்தறி நெசவு தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தியிடம் புகார் மனு அளித்தனர். மேலும் ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகி தங்களது கோரிக்கை மனுவினை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
அரசு அனுமதியின்றி மின்சார நெசவு இயந்திரம் மூலமாக பட்டாடைகளை நெசவு செய்பவர்கள் மற்றும் அதனை பெற்றுச் செல்லும் வியாபாரிகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைத்தறி நெசவு தொழிலாளர்கள் வேண்டுகோள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேசிய கைத்தறி தினம் - கௌரவிக்கப்பட்ட நெசவாளர்கள்