ராணிப்பேட்டை: கலவை அருகே உள்ள வேம்பி அருந்ததிபாளையத்தில் 50க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கலவை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் கலவை காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
அதில், குடியிருப்பு அருகே முனுசாமி என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை பாதுகாப்பதற்காகவும், கோழிகள் நிலத்திற்குள் வராமல் தடுக்கவும் உயிர்க்கொல்லி மருந்தை உணவில் கலந்து வைத்தது தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற கோழிகள், மருந்து கலந்த உணவை உட்கொண்டதால் ஒவ்வொன்றாக மயக்கமடைந்து உயிரிழந்தன.
மேலும், நிலத்தின் உரிமையாளர் உரிய இழப்பீடு வழங்குவதாக ஒப்புக்கொண்டதின் அடிப்படையில் காவல் துறையினர் எச்சரித்து இனி இதுபோன்று செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே ரயில்வே டிக்கெட்: பயணிகள் அதிர்ச்சி