ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு உதவும் விதமாகவும், " We For You" (நாங்கள் உங்களுக்காக) என்ற புதிய செயல் முறையை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் கடந்த செப்டம்பர் அறிமுகப்படுத்தினார்.
இதன் மூலம் மாவட்டம் முழுவதும் சுமார் 262 மூத்த குடிமக்கள் கண்டறியப்பட்டு, அவர்களது இல்லங்களில் ரோந்து புத்தகம் (Patta Book) வைக்கப்பட்டும். பட்டா புத்தகம் கையொப்பமிடும் வகையிலும், அதிலுள்ள கியூஆர் கோட்- ஐ (QR Code) ஸ்கேன் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் உள்ள ரோந்து காவலர்கள் தினமும் மூன்று முறை அந்த வீட்டிற்குச் சென்று, மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் சேவைகளை செய்யவும், அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கவும் இந்த நடைமுறை உறுதுணையாக இருக்கும்.
![ராணிப்பேட்டை காவலர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vlr-05-ranipet-v4u-image-script-7209364_07102020165732_0710f_1602070052_1087.jpg)
இத்திட்டதின் தொடர்ச்சியாக, இன்று (அக். 07) அரக்கோணம் உட்கோட்டம் சோளிங்கர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்ன பராஞ்சி கிராமத்திலுள்ள மூத்த குடிமக்களை சந்தித்த இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், அவர்களுக்கு தேவையான பழங்கள், கபசூர குடிநீர் மற்றும் முகக்கவசத்தினை வழங்கினார். உடன் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் உள்ளார்.
![ராணிப்பேட்டை காவலர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vlr-05-ranipet-v4u-image-script-7209364_07102020165732_0710f_1602070052_536.jpg)
இதையும் படிங்க : காட்டு யானையை வனத்திற்குள் அனுப்பிய அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்!