ETV Bharat / state

இரு பிரிவினருக்கிடையே மோதல்: இருவர் அடித்துக் கொலை - Clash between two communities Two beaten to death

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.இருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Clash between two communities near Ranipettai: Two beaten to death

author img

By

Published : Apr 8, 2021, 10:39 AM IST

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சோகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்சுனன்( 23). இவர், அதே ஊரை சேர்ந்த சூர்யா(21), மதன்(16) மற்றும் வல்லரசு(21). ஆகியோருடன் குருவராஜப்பேட்டையில் உள்ள கடை ஒன்றில் நேற்று (ஏப். 07) நின்றுகொண்டிருந்தார். அப்போது, பெருமாள்ராஜப்பேட்டையைச் சேர்ந்த மாற்று சமுதாயத்தினர் சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, நேற்று இரவு 8 மணியளவில் நால்வரும் பெருமாள்ராஜபேட்டை பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது, பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த 20 பேர் கத்தி, கம்பி உள்ளிட்டவற்றை கொண்டு கண்மூடித்தனமாக அவர்களை தாக்கியுள்ளனர்.

இரு பிரிவினருக்கிடையே மோதல்

பின்னர் அங்கு சென்ற சோகனூர் கிராமத்தினர், சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் அர்சுனன் மற்றும் சூர்யா ஆகியோர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். இதற்கிடையில் இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த சோகனூர் மக்கள் இரவு முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க பாதுகாப்பிற்காக 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.