ராணிப்பேட்டை: பணப்பாக்கம் அடுத்த மேலப்புலம் புதூரைச் சேர்ந்தவர் பார்த்திபன் (27). இவர் மதியம் 1 மணி அளவில் தனது வீட்டிலிருந்து பணப்பாக்கத்துக்கு எலெக்ட்ரிக் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.
அண்ணா நகர் அருகே சென்றபோது திடீரென பைக் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் அதிர்ச்சியடைந்த பார்த்திபன், பைக்கை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பினார். பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் பேட்டரி பைக் முழுவதுமாக எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து பணப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு