ETV Bharat / state

அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கில் ஏழு பேருக்கு குண்டாஸ்! - அரக்கோணம் இரட்டைக் கொலை

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் ஏழு பேரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர்.

7 பேர் குண்டர் சட்டத்தில் கைது
7 பேர் குண்டர் சட்டத்தில் கைது
author img

By

Published : May 8, 2021, 8:09 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த சோகனூரில் மாற்று சமுதாயங்களைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே மோதல் நடந்தது. அதில் அக்கிராமத்தைச் சேர்ந்த அர்சுனன் (26), சூர்யா (26) ஆகிய இருவரும் கத்தி, கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் பலமாகத் தாக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும் மதன், வள்ளரசு, சௌந்தர்ராஜ் ஆகியோர் படுகாயங்களுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 13 பேரை காவல் துறையிறர் கைது செய்தனர். அவர்களில் சத்யா (32), புலி (20), சூர்யா (20), கார்த்திக் (22), மூக்கன் (எ) ராஜசேகர் (28), அஜித் (24), மதன் (34) ஆகிய ஏழு பேரை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி இளைஞர்கள் ஏழு பேரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சகோதரர்களுக்குள் ஏற்பட்ட சொத்து தகராறு: சர்பத் பாட்டிலால் தாக்கப்பட்ட சகோதரி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.