வாலாஜா அடுத்த செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது மதுராந்தகம் அடுத்த அணைக்கட்டு பகுதியில் நடந்த கொலை வழக்கில் காவல் துறையினர் இவரை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான இவர், விசாரணைக்காக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். காவல் துறை வாகனத்தில் மிகுந்த பாதுகாப்புடன் அழைத்து சென்று ஆஜர்படுத்தப்பட்டுவிட்டு மீண்டும் வேலூர் சிறைக்கு திரும்பினர்.
காவல் துறை வாகனம் வாலாஜா டோல்கேட் அருகே வந்தபோது, இயற்கை உபாதை கழிப்பதாகக் கூறியுள்ளார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் தப்பியோடிவிட்டார்.
ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கீதா தலைமையிலான காவல் துறையினர், தற்போது வெங்கடேசனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 குழந்தைகள் காயம்