ராணிப்பேட்டை: கலவை தாலுகா மாம்பாக்கம் அடுத்த மேலப்பழந்தை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருமலை - இலக்கியா தம்பதி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். திருமலை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துநராகப் பணியாற்றிவருகிறார்.
இவரது மூன்றாவது மகன் அஷ்வின் (8) மேலபழந்தை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4ஆம் வகுப்புப் படித்துவருகிறார்.
தமிழ்நாட்டில், தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த மாணவன் அஷ்வின் தொலைக்காட்சிகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் மழை பெய்துவருவது குறித்தும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்தும் பார்த்து தனது தந்தையிடம் கூறி வருந்தியுள்ளார்.
இந்நிலையில் மாணவன் அஷ்வின் தான் இரண்டு ஆண்டுகளாக உண்டியலில் சேமித்துவைத்திருந்த 1338 ரூபாயை வெள்ள நிவாரணத்துக்காக ராணிப்பேட்டை ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் அளித்துள்ளார்.
நிவாரணத் தொகையை மாணவனிடம் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொகைக்கான ரசீதை வழங்கி பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் தொடங்கிய விமான சேவைகள்