ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இருந்து மினி வேன் ஒன்று தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது நெகுந்தி சோழா ஹோட்டல் அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்துக்கொண்டிருந்த இருச்சகர வாகனத்தின் மீது வேகமாக மோதியதில், இருச்சகர வாகனத்தில் பயணித்த 3 பேர் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் மினி வேனில் பயணம் செய்த குணசேகரன் (32) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த கிராமிய காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையிலான காவல் துறையினர் மினிவேனில் பயணித்த சேகர், முருகன், இருச்சகர வாகனத்தில் வந்த தினேஷ், சங்கர், ஆகாஷ் ஆகியோரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆகாஷ், சங்கர் ஆகிய இருவரும் சிகிச்சைப் பலனின்றி இன்று (நவம்பர் 18) உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வடோதரா கோர விபத்து: குழந்தை உள்பட 10 பேர் உயிரிழப்பு!