ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அடுத்த நம்புதாளை கிராமத்திலுள்ள ஊரணியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.