ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகில் மேலக்கொடுமலூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரய்யா மகன் நவநீதகிருஷ்ணன்(25). இவருக்கும் ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளுர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் படிக்கச் சென்ற இடத்தில் பழக்கமாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமி என்று தெரிந்தும் அவரை நவநீதகிருஷ்ணன் திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிய வருகிறது.
இதனைத்தாங்க முடியாமல் அந்தச் சிறுமி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இச்சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நவநீதகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.