ராமநாதபுரம்: அழகன்குளம் தேவர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பவர் வெளிநாட்டில் கூலியாக பணிபுரிந்து ஊர் திரும்பியுள்ளார்.
இவர் அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட அந்த சிறுமியுடன் நெருங்கி பழகிவந்துள்ளார். அதை நம்பிய சிறுமி தன்னுடைய தனிப்பட்ட புகைப்படத்தை சிறுமியிடம் இருந்து வாங்கி அதை வைத்துக்கொண்டு சிறுமியை ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.
சிறுமி வர மறுக்கவே அதனை வாட்ஸ்அப் மூலம் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பரப்பியுள்ளார். இதுதொடர்பாக 17 வயது சிறுமியின் தாய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.