திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று, முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை ஆதரித்து சாயல்குடியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியபோது, ”கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் மதச்சார்பற்ற கூட்டணிக்கு அளித்த வெற்றி பிரதமர் மோடியை கோபமடையச் செய்துள்ளது. அதன் காரணமாகவே இரவோடு இரவாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாக்காசாக அறிவித்தார். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவளித்து மோடியையும் எடப்பாடி பழனிசாமியையும் அதேபோல செல்லாக்காசாக்க வேண்டும்.
மோடியை பற்றி நான் பேச ஆரம்பித்தாலே கடுமையான வார்த்தைகளைக் கொண்டு அவரை நீங்கள் திட்டுகிறீர்கள். அதற்காக என்மீது தற்போது வரை 22 வழக்குகள் போட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தபின் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் எடுப்பார். அதேபோல கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3️ ஆம் தேதி காரோனா நிவாரண நிதியாக ரேஷன் கார்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் இன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம்!