உலக சுற்றுச்சூழல் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பசுமை ராமேஸ்வரம் என்ற அமைப்பினர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் #publictransportchallenge என்ற வாசகத்தை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்திய கடற்படை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பின்பு பசுமை ராமேஸ்வரம் வளாகத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்பு பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் சுற்றுச்சூழலின் அத்தியாவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.