ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கே.கே. நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலைபார்க்கும் காமராஜ் என்பவரின் மனைவி ரெபேக்கா. இவர் நேற்று (பிப். 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சிசெய்தார்.
அப்போது, அங்கிருந்த காவலர்கள் மண்ணெண்ணெய் கேனைப் பறித்து அவரை தற்கொலை முயற்சியிலிருந்து தடுத்தனர்.
மாமனார், நாத்தனார் கொடுமை தாங்காமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் அந்தப் புகார் மீது காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதனால் இரண்டு பெண் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றாகவும் அப்பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர்.பி உதயகுமார்