ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம் அருகே கும்பரம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு கரோனா தொற்று உள்ளதா என்பதை அறிய மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சையில் இருந்த மூதாட்டி திடீரென உயிரிழந்துள்ளார். தற்போது, அவரது உடல் உடற்கூறாய்வு கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கூறுகையில்," மூதாட்டியின் பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். அப்பெண்ணிற்கு வேறு உடல்நலப்பிரச்சினைகள் இருந்துள்ளன. ரத்த பரிசோதனை முடிவு வந்தபின் தான் எதுவென்றாலும் உறுதியாக சொல்ல முடியும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தாமாக முன்வர வேண்டும்' - தமிழ்நாடு அரசு வேண்டுகொள்