ETV Bharat / state

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்? பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

author img

By

Published : Aug 12, 2020, 1:56 PM IST

ராமநாதபுரம் : அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் பதிலளிக்காமல் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Who is the AIADMK Chief Ministerial candidate?  minister baskaran slipped away unresponsive

ராமநாதபுரம் மாவட்டம், ஓம்சக்தி நகர் பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட காதி கிராஃப்ட் நிலையத்தை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், “மாவட்டம் முழுவதும் புதிய கதர் விற்பனை நிலையங்களைத் தொடங்கி அதன் மூலம் வருவாய் அதிகரிக்க உள்ளோம். இதன் மூலம் நெசவாளர்கள் பயன் பெறுவார்கள். கரோனா தொற்று பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்கள், தொழிலாளர்களுக்கு அரசு உதவி வருகிறது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, வரும் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கின்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் சென்றார்.

முன்னதாக, அதிமுகவை இரு தலைவர்கள் வழி நடத்துவதால், தேர்தலுக்குப் பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்றுகூடி முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பர் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார்.

முன்னதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ”எடப்பாடி பழனிசாமியே என்றும் முதலமைச்சர்” எனக் கூறியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.