ETV Bharat / state

தண்ணீரைத் தேடி அலையும் பறவைகள் - நடவடிக்கை எடுக்குமா அரசு? - பறவைகள் சரணாலயம்

ராமநாதபுரம்: தண்ணீர் இல்லாமல் பறவைகள் சரணாலயங்கள் அனைத்தும் வறண்ட பாலைவனம்போல் காட்சியளிக்கின்றன. இதனால்,பறவைகள் நீரைத் தேடி அதிக தூரம் அலையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பறவைகள்
author img

By

Published : May 11, 2019, 10:39 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தாங்கல், சித்திரகுடி, காஞ்சிரங்குளம், மேலச்செல்வனூர், சக்கரக்கோட்டை என ஐந்து பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவம்பரில் தொடங்கி மே மாதம் வரையிலான காலங்களில் தென் கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் இருந்து வரும் பறவைகள், தங்கியிருந்து குஞ்சு பொறித்து செல்வது வழக்கம். கடந்த முன்று ஆண்டுகளாக ராமநாதபுரத்தில் போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், வலசை வரும் பறவைகளின் வருகையிலும் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இருப்பினும், வனத்துறையினரின் நடவடிக்கைகளால் பெரும்பாலான பறவைகள் சரணாலயம் வந்தடைய காரணமாக அமைகிறது.

தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பறவைகள்

கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 50 ஆயிரத்திற்கும் மேலான பறவைகள் வந்திருப்பதும், 15 விழுக்காடு பறவை வருகை அதிகரித்திருப்பதும், 20 புதிய பறவை இனங்கள் வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் தண்ணீரின்றி நீர்நிலைகள் வறண்ட பாலைவனம்போல் காட்சி அளிக்கிறது. மேலும், தேர்த்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் இல்லாமல் மரங்கள் காய்ந்துபோய் பட்டுப்போனதால், பறவைகள் முட்டை பொறித்து தங்களின் குஞ்சுகளுக்கு உணவு நீர் தேடி அதிக தூரம் அலையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தேர்த்தாங்கல் பறவைகள் சரணாலயம்

இதுகுறித்து ஈடிவி பாரத் செய்தியாளரிடம் வனத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், 'ராமநாதபுரம் வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளி மூலம் இயங்கும் போர்வெல் மோட்டர், 5 சரணாலயங்களில் அமைக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். போர்வெல் அமைந்தால் பறவைகளின் தண்ணீர் தேவை போக்கப்படும்” என்றார்.

Intro:இராமநாதபுரம்
மே.11
சரணாலயங்கள்
தண்ணீர் இன்றி தவித்து வரும் பறவைகள்.

தண்ணீர் தேவையை போக்க வனத்துறையின் புதிய திட்டம்.

Body:இராமநாதபுரம் மாவட்டம் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் காலிக் குடங்களுடன் மக்கள் சாலைகளில் செல்லும் காட்சியை பார்க்க முடியும் அதே நிலைமையில் தான் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள 5 சரணாலங்களுக்கு வலசை வரும் பறவைகளின் நிலையாக மாறி வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கள், சித்திரகுடி, காஞ்சிரங்குளம், மேலச்செல்வனூர், சக்கரக்கோட்டை என 5 பறவைகள் சரணாலயம் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் நவம்பரில் துவங்கி மே மாதம் வரையிலான காலங்களில் தென் கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் இருந்து பறவைகள் இங்கு வந்து தங்கி குஞ்சு பொறித்து செல்வது வழக்கம்.

கடந்த முன்று ஆண்டுகளாக இராமநாதபுர மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இது இங்கு உள்ள மக்களை மட்டுமல்லாமல் வலசை வரும் பறவைகளின் வருகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பறவைகள் எண்ணிக்கை குறைய துவங்கியது. இருப்பினும் வனத்துறை நடவடிக்கைகளின் காரணமாக பெரும்பாலான பறவைகள் சரணாலயம் வந்தனர்.

குறிப்பாக மஞ்சள் மூக்கு நாரை, கூழைகிடா சாம்பல் நாரை, செங்கால் நாரை கரண்டிவாயன், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட 12க்கும் அதிகமாக வகையைச் சேர்ந்த பறவைகள் வந்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 50 ஆயிரத்திற்கும் மேலான பறவைகள் வந்திருப்பதும் 15%பறவை வருகை அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

மேலும் 20 புதிய பறவை இனங்கள் வந்திருப்பது தெரியவந்தது.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் தண்ணீர் இன்றி நீர்நிலைகள் வறண்டு காட்சி அளிக்கின்றனர்.
மேலும்
இராமநாதபுரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தேர்த்தங்கள் பறவைகள் சரணாலயம் இங்கு தண்ணீர் இன்றி மரங்கள் காய்ந்து காட்சியளிக்கிறது. பறவைகள் முட்டை பொறித்து தங்களின் குஞ்சுகளுக்கு உணவு நீர் தேட அதிக தூரம் அலையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து கிராமவாசி பஞ்சரத்னம்-பேட்டி உள்ளது.

சரணாலயம், பறவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு குறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்த போது
" இராமநாதபுரம் வனத்துறை சார்பில் 10லட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளி மூலம் இயங்கு போர்வெல் மோட்டர், 5 சரணாலயங்களில் அமைக்க அரசிடம் கேட்டு உள்ளதாகவும் அது கூடிய விரைவில் கிடைக்கும் பட்சத்தில், தண்ணீர் தேவைப்படும் காலங்களில் அந்த போர்வெல் மூலம் நீர் நிரப்படும் பறவைகளின் தண்ணீர் தேவை போக்கப்படும் எனக் கூறினார்.

Conclusion:கடல் கடந்து வரும் பறவைகளை ஏமாற்றாமல் அதற்குரிய வாழ்விடத்தை அமைத்து தர வேண்டும் என்பதே அந்தந்த சரணாலயங்கள் அருகில் வசிக்கும் மக்கள் மற்றும் சமூக ஆர்வர்களின் கருத்தாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.