ETV Bharat / state

பறவைகள் சரணாலயம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு - பறவைகள் சரணாலயம் அமைக்க எதிர்ப்பு

ராமநாதபுரம்: சக்கரக்கோட்டை கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

sanctuary
sanctuary
author img

By

Published : Feb 15, 2021, 8:59 PM IST

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை கம்மாயை பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, "ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜசூரியமடை ஊராட்சியில் பாய்க்கரை, அச்சடிப்பிரம்பு, கோவிந்தனேந்தல், வன்னிக்குடி, சக்கரக்கோட்டை அம்மன்கோயில் ஆகிய கிராமங்களில் சங்கரக்கோட்டை கண்மாய் நீர்பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். சில ஆண்டு காலமாக மழை அளவு குறைந்து வருவதால் கண்மாயில் நீர்வரத்து குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களின் கருத்து கேட்கமால் அரசோ சில நபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சக்கரக்கோட்டை கண்மாய் பறவைகள் சரணாலாயமாக மாற்ற முடிவு செய்துள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் கண்மாயில் நாட்டு கருவேல மரங்கள் அதிகமாக பரவி அது மோசமான தருவாயில் உள்ளது. இதை பயன்படுத்தி சில சமூகவிரோதிகள் இங்கு வந்து மது அருந்துதல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆடு மாடு மேய்க்கும் பெண்கள் கண்மாய் பகுதியில் மேய்சலுக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

அதுமட்டுமல்லாது வனத்துறையினர் இப்பகுதிகளில் ஆடு, மாடுகளை மேய்க்க அனுமதி மறுக்கின்றனர். வனத்துறையினர் கண்மாயில் தாழ்வான பகுதிகளிலிருந்து பறவைக்களுக்காக கால்வாய் போன்று தோண்டி குட்டைகள் அமைத்துள்ளனர். இதனால் கண்மாயிலிருந்து நீர் எடுத்து விவசாயித்திற்கு பயன்படுத்த வனத்துறையினர் அனுமதி மறுக்கின்றனர்.

எனவே கண்மாயை பழையபடி கொண்டு வரவும் சரணாலயமாக மாற்றும் திட்டத்தை கைவிடவேண்டும். கண்மாயில் தண்ணீர் இல்லாத காலத்தில் நாங்கள் வெள்ளரி , தினை பயிர் வகைகள் பயிரிட்டு பிழைப்பு நடத்தி வருகிறோம். இப்போது அதற்கும் வனத்துறையினர் தடைவிதிக்கின்றனர். இதனால் இங்கு வசிக்கும் விவசாயிகள் பெரும் மனவேதனையில் உள்ளோம்.

நாங்கள் வருடாவருடம் பயிர் செய்த கால கட்டத்தில் கண்மாயை மிகவும் சுத்தமாக வைத்திருந்தோம். கண்மாயில் தண்ணீர் இருக்கும் போது கடல்போல் காட்சியளித்த கண்மாய், தற்போது கருவேலம் மரங்கள் ஆக்கிரமித்து இருப்பதை பார்க்கையில் மிகவும் கவலையாக உள்ளது. இந்த கண்மாய் பறவைகள் சரணாலயமாக 2014 - 2020 வரை இந்த திட்டம் உள்ளது. கடந்த 1 மாதத்திற்கு முன்பு வனத்துறை, நீர் மேலாண்மை வாரியத்திலிருந்து எங்கள் ஊர் மக்களிடம் கருத்து கேட்டனர். அதற்கு நாங்கள் பறவைகள் சரணாலயமாக நீட்டிப்பதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளோம். எனவே இந்தாண்டிலிருந்து கண்மாய் மீண்டும் பழைய நிலைமைக்கு மாற சரணாலயத்தை ரத்து செய்து உத்தரவிடவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத அதிசய கிராமம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.