ETV Bharat / state

ராமநாதபுரத்தில் இருவருக்கு கரோனா தொற்று அறிகுறி; தூய்மைப் பணிகள் தீவிரம்

author img

By

Published : Apr 1, 2020, 10:23 PM IST

ராமநாதபுரம்: டெல்லியில் நடைபெற்ற மத கூட்டத்தில் பங்கேற்று ராமநாதபுரம் திரும்பிய 17 பேரில் இருவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்
ராமநாதபுரம்

ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் தீயணைப்புத் துறையினர், நகராட்சி மூலம் கடை பகுதிகளுக்கு கிருமிநாசினி தெளிப்பதை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், “டெல்லியில் நடைபெற்ற மத கூட்டத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 33 பேர் பங்கேற்றுள்ளனர். அதில் 14 பேர் டெல்லியிலேயே உள்ளனர். இரண்டு பேர் சென்னையில் உள்ளனர். 17 பேர் ராமநாதபுரத்திற்கு திரும்பி வந்துள்ளனர். இதில் இருவருக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பதாக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி

அவர்களின் ரத்தப் பரிசோதனை இறுதி அறிக்கை இன்னமும் கிடைக்கவில்லை. மற்ற 15 பேரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் குடும்பமும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், அந்தப் பகுதியில் ஐந்து கிலோ மீட்டருக்கு 415 சுகாதார ஊழியர்கள் கொண்ட குழு சென்று அடுத்த 14 நாள்களுக்கு நோய் தொற்றுக்கான அறிகுறி இருக்கிறதா என்று வீடுவீடாக கேட்டறிய உள்ளனர்” என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.