ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்துவது சட்டவிரோதமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நேற்று (ஜன. 8) தனுஷ்கோடி பகுதியிலிருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்த இருப்பதாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தனுஷ்கோடி, அதனைச் சுற்றி உள்ள தீவுப் பகுதிகளில் ஹோவர்கிராப்ட் படகு மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர்.
அப்போது, தனுஸ்கோடி அருகே மூன்றாம் தீடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 மூட்டைகளில் சுமார் 750 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க... துபாய்க்கு லட்சக்கணக்கில் கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்: 5 பேர் கைது