ETV Bharat / state

இறந்தும் உயிர்ப்புடன் இருக்கும் ராணுவ வீரர் பூவலிங்கம்!

author img

By

Published : Jun 24, 2021, 11:00 PM IST

ராமநாதபுரம்: 2005ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு கிராம மக்கள் மற்றும் சேது சீமை பட்டாளம் ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட ராணுவ வீரருக்கு கிராம மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அஞ்சலி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கொத்தபூக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பூவலிங்கம். இவர் 2000ஆம் ஆண்டு ராணுவத்தில் தேர்ச்சி பெற்று நாசிக்கில் பணியமர்த்தப்பட்டார். பின்னர் ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், 2005ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பூவலிங்கம் வீரமரணம் அடைந்தார்.

ராணுவ வீரருக்கு அஞ்சலி

அதனையடுத்து இவரது உடல் கொத்தபூக்குளம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கிராம மக்கள் மற்றும் ராணுவத்தினர் வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு, இவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் சேது சீமை பட்டாளம் ராணுவத்தினர் மற்றும் கிராம மக்கள் சார்பில் அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து சிறப்பு பூஜை செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து உறவினர்கள் தெரிவித்ததாவது, 'ராணுவ வீரர் பூவலிங்கம் தாய் நாட்டிற்காக இன்னுயிர் ஈர்த்து தங்களுக்கு பெருமையளிக்கிறது. 16 ஆண்டுகளாகியும் அவரது இறப்பு கிராமத்தினருக்கு பேரிழப்பாகத்தான் அமைந்துள்ளது' என்று தெரிவித்தனர். பின்னர் அவரது தாயார் வீரமரணமடைந்த தனது மகனை நினைத்து கண்ணீர் விட்டு அழுதார்.

இதையும் படிங்க: 'இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ஓய்வு ராணுவ வீரர் : 100ஆவது பிறந்த நாள்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.