ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர், சின்னதம்பி. இவர் சொந்தமாக 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல மேய்ச்சலுக்குச் சென்று விட்டு ஆடுகளை வீட்டிற்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையைக் கடக்க முயன்றபோது, ராமேஸ்வரத்தில் இருந்து திருப்புவனம் நோக்கிச்சென்ற சுற்றுலா வேன் ஒன்று, மோதியதில் செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இச்சம்பவம் குறித்து வேன் ஓட்டுநர் பரமசிவத்திடம் பரமக்குடி தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தில் 25 செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இயற்கை விவசாயத்தில் ஸ்ட்ராபெரி பயிரிட்டு கலக்கும் விவசாயி