ETV Bharat / state

'தண்ணீர் பிரச்னை குறித்து தமிழ்நாடு அரசு வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை' - SAYS CPM

ராமநாதபுரம்: முதலமச்சரும், தமிழ்நாடு அமைச்சர்களும் மத்திய அமைச்சர் பதவி கிடைப்பது தொடர்பாகத்தான் பேசிவருகிறார்களே தவிர, தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்னையை சரிசெய்வது தொடர்பாக மத்திய அரசிடம் யாரும் பேசவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணண்
author img

By

Published : Jun 16, 2019, 9:21 AM IST

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழுக் கூட்டம் நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணண் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

'தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் தமிழ்நாடு முதலமைச்சர் உட்படப் பல அமைச்சர்கள் டெல்லியில்தான் முகாமிட்டுள்ளனர். அவ்வாறு முகாமிட்டுள்ளவர்கள், மத்திய அமைச்சர் பதவி தொடர்பாகத்தான் பேசுகின்றார்கள். இதுதான் அவர்களின் பணியா?

தமிழ்நாட்டில் நிலவிவரும் குடிநீர் பிரச்னையை சரிசெய்வது தொடர்பாக மத்திய அரசிடம் யாரும் பேசவில்லை. காவிரி விவகாரம் தொடர்பாகவும் அவர்கள் பேசியதாகத் தெரியவில்லை.

தமிழ்நாடு அரசின் நாட்கள் எண்ணப்படுவதுதான் உண்மையான காரணம். ஓபிஎஸ் உட்பட 11 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இருக்கின்றது. ஆனால் தீர்ப்பு இன்னும் வரவில்லை; அவ்வாறு தீர்ப்பு வந்தால் ஆட்சி கலைந்துவிடும்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள குடிநீர் பிரச்னைகளை சரிசெய்ய ஏரி, குளங்களைத் தூர்வாரலாம், மழை நீர் சேமிப்பு திட்டங்களை அமல்படுத்தலாம், இதற்கு மத்திய அரசிடம் நிதி பெற்றிருந்தால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்னைகளை சரிசெய்திருக்கலாம்.

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

காவிரி பிரச்னை, தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி குடிநீர் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் மேலும் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்னைகளை தீர்க்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என அவர் தெரிவித்தார்.

Intro:இராமநாதபுரம்
ஜூன்.15

முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் மத்திய மந்திரி பதவி கிடைப்பது தொடர்பாக தான் பேசி வருகிறார்கள் தவிர தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை சரிசெய்வது தொடர்பாக மத்திய அரசிடம் யாரும் பேசவில்லை என
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணண்Body:தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் இன்று இராமேஸ்வரத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொது செயலாளர் கே. பாலகிருஷ்ணண் செய்தியாளர்களை சந்தித்தார்., அப்போது பேசிய அவர் :

தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் தமிழக முதல்வர் உட்பட பல அமைச்சர்கள் டெல்லியில் தான் முகாமிட்டுள்ளனர், அவ்வாறு முகாமிட்டுள்ள அவர்கள் மத்திய மந்திரி பதவி தொடர்பாக தான் பேசிகின்றார்கள் இதான் அவர்களின் பணியா? மேலும் தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை சரிசெய்வது தொடர்பாக மத்திய அரசிடம் யாரும் பேசவில்லை. காவிரி விவகாரம் தொடர்பாகவும் அவர்கள் பேசவில்லை.

தமிழக அரசின் நாட்கள் எண்ணப்படுவதுதான் உண்மை காரணம் ஓபிஎஸ் உட்பட 11 எம்,எல், ஏக்களின் வழக்கின் உச்சநீதிமன்றத்தில் இருக்கின்றது, ஆனால் தீர்ப்பு இன்னும் வரவில்லை அவ்வாறு தீர்ப்பு வந்தால் ஆட்சி கலைந்து விடும் மேலும் தமிழகத்தில் நிலவியுள்ள குடிநீர் பிரச்சனைகளை சரிசெய்ய ஏரி, குளங்களை தூர்வாரலாம், மழை நீர் சேமிப்பு திட்டங்களை அமல்படுத்தலாம், இதற்கு மத்திய அரசிடம் நிதி பெற்றிருந்தால் எதிர்காலத்தில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை களை சரிசெய்திருக்கலாம்,

காவிரி பிரச்சனை, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் மேலும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.