ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதன் காரணமாக அங்கு அதிக அளவிலான புள்ளிமான்கள் வாழ்ந்துவருகின்றன.
இந்நிலையில் குஞ்சகுளம் கீழ குடியிருப்பு பகுதியில் காலை வந்த புள்ளி மானை அங்கிருந்த நாய்கள் அனைத்தும் துரத்தி கடித்தன. அப்பொழுது அந்த பகுதியில் இருந்த கிராம மக்கள் நாய்களை விரட்டி காயம் அடைந்த புள்ளி மானை மீட்டு பத்திரமாக வைத்து வேட்டை தடுப்பு காவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
நீண்ட நேரமாகியும் வேட்டை தடுப்பு காவலர்கள் வராததால் பொதுமக்கள் அந்த காயம்பட்ட புள்ளிமானை பத்திரமாக தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர். தீயணைப்புத் துறையினர் அந்த புள்ளிமானுக்கு கால்நடைத் துறை மூலமாக முதலுதவி சிகிச்சை அளித்து பின் அதனை வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்.
இதையும் படிங்க...கல்வி கற்க தினமும் 24 கி.மீ., பயணம்... விளிம்பு நிலை வாழ்க்கையிலிருந்து விளம்பரத் தூதரான பெண்
!