ETV Bharat / state

பெண்களுடன் தோழி எனக்கூறி வாட்ஸ்அப்பில் பழகிய நபர்: சைபர் கிரைம் அதிரடி - Ramanadhapuram district cyber crime

வாட்ஸ்அப்பில் பெண்களுடன் தோழி எனக்கூறி ஏமாற்றி, பழகிவந்த நபரை சைபர் கிரைம் காவலர்கள் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

பெண்களுடன் தோழி எனக்கூறி வாட்ஸ்-அப்பில் பழகிய நபர்

author img

By

Published : Aug 18, 2021, 10:01 PM IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு, அவருடைய தோழி அனுப்புவது போல் வாட்ஸ்அப்பில் இளைஞர் ஒருவர் தகவல் அனுப்பி உள்ளார்.

அந்தப் பெண்ணின் மூலம் அவருடைய மற்ற தோழிகளின் செல்போன் எண்களையும் பெற்றுக்கொண்ட நபர், அவர்களிடமும் தோழிகள் அனுப்புவது போல, இரவு நேரங்களில் வாட்ஸ்அப்பில் தொடர்புகொண்டார்.

புகைப்படங்களைப் பகிர்ந்த பெண்கள்

அப்போது சில பெண்கள் தங்களின் குடும்ப நிலை, அந்தரங்க பிரச்னைகளை வாட்ஸ்அப் தகவல்களாக தோழி என நினைத்து, அந்நபரிடம் பகிர்ந்துள்ளனர். மேலும், அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து, அந்நபர் தோழியாக பேசிவந்த நிலையில், ஒரு பெண்ணிடம் பேசும்போது திருமணமாகிவிட்டதா? என்று தகவல் அனுப்பி உள்ளார்.

அதற்கு அந்தப் பெண் ஒரே தெருவில் இருக்கிறோம், எனக்குத் திருமணம் ஆகவில்லை என்பது உனக்குத் தெரியாதா? என்று பதில் அனுப்பி கேட்டுள்ளார்.

வாட்ஸ்-அப்பில் பெண்களுடன் தோழி எனக்கூறி ஏமாற்றிய செயல்

களமிறங்கிய சைபர் கிரைம்

அந்நபர் கேட்ட கேள்வியால் உஷார் அடைந்த பெண், தோழி பெயரில் வரும் வாட்ஸ்அப் தகவல்கள் குறித்து விசாரிக்கத் தொடங்கினார்.

உடனே எந்தத் தோழி பெயரில் தகவல் வந்ததோ, அவரைத் தொடர்புகொண்டு பேசியதுடன், அவர் பெயரில் வந்த வாட்ஸ்அப் தகவல்களையும் காண்பித்துள்ளார். மேலும், தனது மற்றத் தோழிகளையும் உஷார்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து, காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் ராமநாதபுரம் சைபர் கிரைம் காவலர்கள் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினர்.

மிரட்டல் விடுத்த நபர்

விசாரணையில், வாட்ஸ்அப்பில் தொடர்புகொண்டு பெண் பழகுவது போல் ராமநாதபுரம் பெண்களிடம் தகவல் அனுப்பி பழகியவர், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மேலபுழுதியூர் அம்பேத்கர் நகர்ப் பகுதியைச் சேர்ந்த பீம்ராவ் (35) என்பது தெரியவந்தது.

தன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதை அறிந்து உஷாரான பீம்ராவ் செல்போனில் உள்ள தகவல்களை அழித்துள்ளார். மேலும், யாருக்கெல்லாம் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி இருந்தாரோ, அந்தப் பெண்களை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

அப்போது, நீங்கள் காவல் நிலையத்திற்குச் சென்றால், சேகரித்து வைத்துள்ள உங்களின் அந்தரங்க, ஆபாசப் படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

பெண்களுடன் தோழி எனக்கூறி ஏமாற்றி பழகிவந்த பீம்ராவ்

உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்

இதனைத்தொடர்ந்து, சைபர் கிரைம் காவலர்கள், காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான செங்கம் பகுதிக்கு விரைந்து சென்று, பீம்ராவை கைதுசெய்து, அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், இவருக்கு திருமணமாகி முதல் மனைவி திவ்யா பிரிந்துசென்ற நிலையில், இரண்டாவதாக ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ள விவரங்கள் தெரியவந்தன.

இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட பீம்ராவை காவலர்கள் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 'பெண்ணின் ஆபாச படத்தை வைத்து மிரட்டிய காவலர் பணியிடை நீக்கம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.