ETV Bharat / state

ஆசிரியர் குணமடைய மாணவர்கள் கூட்டு பிராத்தனை; சிகிச்சைக்கு உதவிட முதலமைச்சருக்கு கோரிக்கை!

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்கு போராடும் ஆசிரியர் குணமடைய வேண்டி பள்ளி மாணவர்கள் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

teacher  Group pray  students Group pray  students Group pray for teacher to get heal  ramanathapuram school students pray for teacher  ramanathapuram news  ramanathapuram latest news  மாணவர்கள் கூட்டு பிராத்தனை  பள்ளி மாணவர்கள் கூட்டு பிராத்தனை  ஆசிரியர் குணமடைய மாணவர்கள் கூட்டு பிராத்தனை  ராமநாதபுரத்தில் ஆசிரியர் குணமடைய மாணவர்கள் கூட்டு பிராத்தனை  ராமநாதபுரம் செய்திகள்  பள்ளி மாணவர்கள்
ஆசிரியர்
author img

By

Published : Oct 21, 2021, 2:34 PM IST

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே தோளூர் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம்-இருளாயி தம்பதியின் மகன் ராஜசேகர் (32). இவருக்கு திருமணமாகி நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர் பரமக்குடியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜசேகருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இவருக்கு தினமும் டயாலிசிஸ் செய்யப்பட்டுவருகிறது.

ஆசிரியருக்காக மாணவர்கள் கூட்டு பிராத்தனை

கூட்டு பிரார்த்தனை

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ராஜசேகரின் பெற்றோர்கள் கூலி வேலை செய்து அன்றாடம் வாழ்ந்து வருகின்றனர். ராஜசேகரின் பெற்றோர் நீரிழிவு மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜசேகருக்கு மருத்துவ செலவுக்கு பணம் இன்றி தவித்து வருகின்றனர். ஒருபுறம் பெற்றோர் பணத்திற்காக அலையும் நிலையில், ராஜசேகர் உயிருக்காக போராடி வருகிறார்.

இவர் விரைவில் குணமடைய வேண்டி, அவர் பணிபுரியும் பள்ளியில் இன்று (ஆக்டோபர் 21) மாணவர்கள், உடன்பணி புரியும் ஆசிரியர்கள், கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ராஜசேகர் குணமடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அம்மா உணவகத்தில் சப்பாத்தி கிடைக்காதது ஏன்? சென்னை மாநகராட்சி விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.