ராமநாதபுரம்: இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு அங்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாத மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வரும் சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் தடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஆறு பேர் நிற்பதாக கியூ பிராச் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து கடலோர காவல் படையினர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் தலைமன்னார், யாழ்பாணத்தில் இருந்து அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்தது தெரியவந்தது. ஆறு நபர்களையும் இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் கடலோர காவல் படை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட பழங்கால நாணயங்கள் பறிமுதல்