ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இடிஞ்சகல் புதூரைச் சேர்ந்தவர்கள் பஞ்சப்பன்-பொன்னம்மாள் தம்பதி. பொன்னம்மாளுக்கும் அவரது மருமகன் முருகனுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், இவர்களுக்குள் நேற்றிரவு (பிப்.5) மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த முருகன் பொன்னம்மாளை கத்தியால் குத்தினார். இதில் பொன்னம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து வந்த கீழக்கரை காவல் துறையினர் பொன்னம்மாளின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக, முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நிலத் தகராறில் இளைஞர் கல்லால் அடித்துக் கொலை: இருவர் கைது